பிரதமர் அலுவலகம்

ஆந்திரப்பிரதேசத்தில் கர்னூலில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 14 FEB 2021 11:12AM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசத்தில் கர்னூலில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், துயரத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரையில், “ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சாலை விபத்து துயரத்தை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான தருணத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களால் துணை நிற்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்” என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1697882) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam