உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து அதிகளவில் பயணிகள் பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டனர்

प्रविष्टि तिथि: 13 FEB 2021 1:42PM by PIB Chennai

2,349 விமானங்களில் 2,97,102 பயணிகள் 2021 பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டதாக விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

2021 மே 25 அன்று உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து இது வரையிலான தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இது தான் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பான, சிறப்பான மற்றும் விரைவான சேவை ஆகிய காரணங்களால் விமான பயணத்தை மக்கள் விரும்புவதாகவும், இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை கொவிட்டுக்கு முந்தைய அளவுகளை எட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

2021 பிப்ரவரி 12 அன்று மொத்தம் 4697 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 5,93,819 பேர் விமான நிலையங்களுக்கு வந்திருந்தனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 2020 மார்ச் 24 முதல் நிறுத்தப்பட்ட விமான சேவைகள், 2021 மே 25 அன்று மீண்டும் தொடங்கின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697685

----- 


(रिलीज़ आईडी: 1697751) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , English , Marathi , Manipuri , Bengali , Assamese , Odia