பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் முதல்வருடன் பிரதமர் பேச்சு; எதிர்பாராத நிகழ்வு குறித்து ஆய்வு
Posted On:
07 FEB 2021 2:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் திரு. திரிவேந்திர சிங் ராவத்துடன் உரையாடி, அம்மாநிலத்தின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “அசாமில் இருந்தபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தராகண்ட்டின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அம்மாநில முதல்வர் திரு. திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர உயர் அதிகாரிகளுடன் பிரதமர் பேசினார். அங்கு நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “உத்தரகாண்டில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வு குறித்து நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். உத்தராகண்ட் மாநிலத்திற்கு இந்தியா துணை நிற்பதுடன் அங்கு வசிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் நாடு பிரார்த்தனை செய்கிறது. உயரதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையை பணியில் அமர்த்துவது, மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் ஆகியவை தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெறுகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
------
(Release ID: 1695951)
Visitor Counter : 172
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam