பிரதமர் அலுவலகம்

சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்


புதிய வரிகள் தொடர்பான நிபுணர்களின் அச்சத்தை பொய்யாக்கிய பட்ஜெட் : பிரதமர்

பட்ஜெட் என்பது, முன்பு வாக்கு வங்கி கணக்குப் பதிவேடாக மட்டுமே இருந்தது, தற்போது நாடு அத்தகைய அணுகுமுறையை மாற்றியுள்ளது:பிரதமர்

விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ளன: பிரதமர்

சுயசார்பு இந்தியாவாக மாற்றுவதே சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் செலுத்தும் மரியாதையாக அமையும் : பிரதமர்

Posted On: 04 FEB 2021 1:36PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா பகுதியில், ‘சௌரி சௌரா‘  நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வானசௌரி சௌரா‘  சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் நூறாண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.   சௌரி சௌரா சம்பவத்தை நினைவுகூறும் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.   உத்தரபிரதேச மாநில ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தைரியமான தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர்சௌரி சௌரா-வில் மேற்கொள்ளப்பட்ட தியாகம்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு புதிய பாதையைக் காட்டியது என்றார்.   சௌரி சௌரா-வில்  நூறாண்டுகளுக்கு முன் நடைபெற்ற இச்சம்பவம், ஒரு அசாதாரண தீவைப்பு சம்பவம் அல்ல, மாறாக, இச்சம்பவத்திற்கான காரணம் மிகப்பெரியது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   எத்தகைய சூழ்நிலையில் இந்த தீவைப்பு நிகழ்ந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததுவரலாற்றில் குறிப்பிடத்தக்க சௌரி சௌரா போராட்டத்திற்கு, நம் தேச வரலாற்றில் தற்போது உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.   இந்த வீரச் சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, சௌரி சௌரா உள்பட அனைத்துக் கிராமங்களிலும், இன்று தொடங்கிஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.   நாடு தனது 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாட உள்ள தருணத்தில், இதுபோன்ற கொண்டாட்டம் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது ஆகும் என்றும் அவர் கூறினார்சௌரி சௌரா தியாகிகள் குறித்து, போதிய அளவிற்கு விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.    இச்சம்பவத்தில் ஈடுபட்ட தியாகிகள், நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்றாலும், நாட்டின் விடுதலைக்காக அவர்கள் சிந்திய ரத்தம், இந்த நாட்டில் என்றென்றும் நிலைத்திருக்கும

 

பாபா ராகவ்தாஸ் மற்றும் மஹாமானா மதன் மோகன் மாளவியா ஆகியோரின் முயற்சிகளால் விடுதலைப் போராட்ட வீர்கள் 150 பேர், தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டதை, இந்த நன்னாளில் நினைவுகூறுமாறு, நாட்டு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.   இதற்கான பிரச்சாரத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், சுதந்திரப் போராட்டம் குறித்து இதுவரை வெளிவராத பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த பிரச்சாரம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.   75-வது சுதந்திர தினத்தையொட்டி, இதுவரை அறியப்படாத விடுதலைப்  போராட்ட வீரர்களின் தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக புத்தகம் எழுதுமாறு, இளம் எழுத்தாளர்களுக்கு மத்திய கல்வித்துறை அழைப்பு விடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.    நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள உத்தரபிரதேச அரசின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.  

அடிமை விலங்கை உடைத்தெறியும் கூட்டு வலிமை, இந்தியாவை உலக வல்லரசாக மாற்றும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.    இதுபோன்ற கூட்டு செயல்பாடுகள், சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு அடிப்படை ஆகும்.   இந்த கொரோனா காலகட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி உதவியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.   மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை மனதிற் கொண்டு, பல்வேறு நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கியது, நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பெருமிதத்தை அளிக்கும்  என்றும் அவர் தெரிவித்தார்.  

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ள சவால்களை எதிர்கொள்ள இந்த பட்ஜெட் புது வேகம் அளிக்கும் என்றார்.   புதிய வரிவிதிப்புகள் மூலம் சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்த நிபுணர்களின் கருத்துக்களை, இந்த பட்ஜெட் பொய்யாக்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.   நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, அதிக நிதியை செலவிட அரசு முடிவு செய்துள்ளதுஇந்த செலவினம் மூலம், புதிய சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் அமைக்கப்படுவதுடன்புதிய ரயில் பெட்டிகள் மற்றும் பேருந்துகளை வாங்குவதுடன், அங்காடிகள் மற்றும் சந்தைகளுக்கு செல்வதற்கான இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேம்பட்ட கல்வி மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க இந்த பட்ஜெட் வழிவகுக்கும்.   இதுபோன்ற நடவடிக்கைகள், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும்இதற்கு முன்பு, பட்ஜெட் என்பது, நிறைவேற்ற இயலாத திட்டங்களின் அறிவிப்பாகத்தான் இருந்தன.  “வாக்கு வங்கி கணக்குகளின் பதிவேடாகத்தான் பட்ஜெட் மாற்றப்பட்டிருந்ததுதற்போது இந்த நாடு அதனை புதிய இலையாக மாற்றுவதற்கான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதுஎன்றும் பிரதமர் தெரிவித்தார்.  

பெருந்தொற்று பாதிப்பை இந்தியா கையாண்ட விதம், உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர்அனைத்துக் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்த இந்த நாடு முயற்சித்து வருவதாகவும் கூறினார்இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளதுமாவட்ட அளவிலும், அதிநவீன பரிசோதனை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது

விவசாயிகள் தான் தேச வளர்ச்சிக்கு அடித்தளம் என்று குறிப்பிட்ட திரு.மோடி, கடந்த 6 ஆண்டுகளில் அவர்களது நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் பட்டியலிட்டார்பெருந்தொற்று பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திய போதிலும், வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க இந்த பட்ஜெட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுவிவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதை எளிதாக்கும் விதமாக, ஆயிரம் சந்தைகள், -நாம் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன

கிராமப்புற கட்டமைப்பு நிதியத்திற்கான ஒதுக்கீடு, 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுஇதுபோன்ற நடவடிக்கைகள், விவசாயிகள் சுயசார்பு அடைவதற்கும், வேளாண் சாகுபடியை லாபகரமானதாகவும்  மாற்றும்கிராமப்புற மக்களின் நிலம் மற்றும் வசிப்பிட சொத்துக்களின் உரிமைக்கான ஆவணங்களை வழங்க ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப்படும்.   முறையான ஆவணங்கள், அந்த சொத்துக்களுக்கு நல்ல விலையும்,   அந்த சொத்துக்களை வைத்துள்ள குடும்பத்தினருக்கு வங்கிக் கடன்களும் கிடைக்கச் செய்வதோடு, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்

இதுபோன்ற நடவடிக்கைகள்மூடப்பட்ட தொழிற்சாலைகள், மோசமடைந்த சாலைகள் மற்றும் நலிந்த நிலையில் உள்ள மருத்துவமனைகளைக் கொண்ட கோரக்பூருக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்உள்ளூர் உரத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.   இந்த நகருக்கு எய்ம்ஸ் கிடைக்கப் பெற்றுள்ளதுஇந்த மருத்துவக் கல்லூரி, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வருகிறதுதியோரியா, குஷிநகர், பஸ்தி மகாராஜ்நகர் மற்றும் சித்தார்த் நகரங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.   இந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட நான்குவழி, ஆறுவழிச்சாலை இணைப்புகள் அமைக்கப்பட்டு வருவதோடு, கோரக்பூரிலிருந்து 8 நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளதுகுஷிநகரில் அமைக்கப்படும் சர்வதேச விமான நிலையம், சுற்றுலாவை அதிகரிக்கச் செய்யும்.   “சுயசார்பு இந்தியா“-வை அடைவதற்கான இந்த மாற்றங்கள், அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதைஎன்று பிரதமர் தெரிவித்தார்

*******


(Release ID: 1695238) Visitor Counter : 253