பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நிதிநிலை அறிக்கை கொவிட்டுக்கு பிந்தைய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 02 FEB 2021 10:58AM by PIB Chennai

கொவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனி பொறுப்பு) பிரதமர் அலுவலகம் பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியம் அணுசக்தி விண்வெளி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை, ஒரு பொருளாதார ஆவணமாக இருந்த போதிலும், பொருளாதாரத்தின் வரைமுறைகளைக் கடந்து உலக நாடுகள் அடங்கிய சமூகத்தில் முன்னணி உறுப்பினராக திரு மோடி தலைமையிலான இந்தியா வளர்ச்சி அடைவதற்கான வரைபடமாக அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கை 2021-22 சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு மாறாக இந்த அறிக்கை, பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து நாட்டிற்கு நிவாரணம் வழங்குவதாக அமைந்துள்ளது என்றார் அவர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கருத்து தெரிவித்தார். உடல்நலன், மருத்துவ தடுப்பு நடவடிக்கைகள், ஆரோக்கியத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் அரசால் வழிநடத்தப்பட்டு, கொரோனா தடுப்பூசி போன்ற மிகப்பெரிய முன்முயற்சிகளில் முன்னோடியாக திகழ்வதற்கான தன்னம்பிக்கையை நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கு வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் வெளிவராத ஒரு சில அம்சங்களைக் குறிப்பிட்ட அமைச்சர், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி அளித்திருப்பதாகக் கூறினார். ஒருபுறம் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளபோது, மூத்த குடிமக்களின் நலனிற்காக 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி கணக்கை தாக்கல்  செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ககன்யான் விண்வெளி ஓடம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் பாராட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694336

******



(Release ID: 1694395) Visitor Counter : 143