சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் குணமடைவோரின் எண்ணிக்கை 97 சதவீதத்தை எட்டியுள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் 11,858 பேர் குணமடைந்துள்ளனர்
Posted On:
01 FEB 2021 12:11PM by PIB Chennai
தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைவோரின் எண்ணிக்கை 97 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டில் இன்று மட்டும் 1.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.56 சதவீதமாக உள்ளது.
இதுவரை 1,04,34,983 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,858 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,551 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி 1, 2021 அன்று 11,427 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உயிரிழப்போரின் எண்ணிக்கை 120-க்கும் கீழே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 118 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிப்ரவரி 1, 2021 காலை 8 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 1,05,821 & புதுச்சேரியில் 2,736 பேர் உட்பட இதுவரை 37.5 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 253 இடங்களில் 14,509 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 69,215 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டிலேயே கேரளாவில்தான் ஒரே நாளில் அதிகளவிலான அதாவது 5,730 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1,670 பேரும், தமிழகத்தில் 523 பேரும் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11,427 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693842
(Release ID: 1694157)
Visitor Counter : 169