நிதி அமைச்சகம்
பெருந்தொற்றினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம், அத்தியாவசிய நிவாரணத்திற்கான அதிக செலவுகளால் வருவாய் வரத்து சரிவு
प्रविष्टि तिथि:
01 FEB 2021 1:54PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தமது நிதிநிலை அறிக்கை உரையில் பெருந் தொற்றினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் வருவாய் வரத்தை வெகுவாக சரிந்திருப்பதாக மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். ஏழைகள், பெண்கள் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் போன்ற சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கிய அத்தியாவசிய நிவாரண பொருட்களால் கூடுதல் செலவும் ஏற்பட்டது.
திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் 2020-21:
திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் 2020-21இன் நிதி பற்றாக்குறையால் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அரசு கடன்கள், பலதரப்பு கடன்கள், சிறுசேமிப்பு நிதிகள், குறுகிய கால கடன்கள் போன்றவற்றின் வாயிலாக நிதிஉதவி வழங்கப்பட்டது. கூடுதலாகத் தேவைப்படும் ரூ. 80,000 கோடிக்காக இந்த 2 மாதங்களில் வெளிச்சந்தைகளை அணுகவிருப்பதாக நிதி அமைச்சர் மேலும் கூறினார்.
வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் 2021-22:
பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக செலவுகளுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள், 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 34.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். இதில் மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 5.54 லட்சம் கோடி, 2020-21 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை விட 34.5 சதவீதம் அதிகமாகும்.
2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின் நிதி பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 6.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்காக சந்தையில் இருந்து பெறப்படும் மொத்த கடன் தொகை சுமார் ரூ. 12 லட்சம் கோடியாக இருக்கும்.
மாநிலங்களுக்காக கடன்:
15வது நிதி ஆணையத்தின் கருத்தின் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 4 சதவீதத்தை மாநிலங்கள் கடனாகப் பெற அரசு அனுமதி வழங்கியுள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த வரம்பில் ஒரு பகுதி மூலதன செலவிற்காக கூடுதலாக செலவு செய்யப்படும். மேலும் நிபந்தனைகளுக்குட்பட்டு மாநில வளர்ச்சியில் 0.5 சதவீத கடன் கூடுதலாக வழங்கப்படும். 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி 2023 24 ஆம் ஆண்டுக்குள் மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் 3 சதவீத நிதி பற்றாக்குறையை மாநிலங்கள் அடைய வேண்டும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693900
(रिलीज़ आईडी: 1694067)
आगंतुक पटल : 363