மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கலா உத்சவ் 2020 நிறைவு நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 28 JAN 2021 4:27PM by PIB Chennai

கலா உத்சவ் 2020-ன் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம் இயக்கத்திற்கு சரியான பாதை மற்றும் வடிவத்தை அளிப்பதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை கலா உத்சவ் நனவாக்குவதாக கூறினார். கலா உத்சவ் 2020-ல் பொம்மைகள் பிரிவை அறிமுகப்படுத்தியதற்காக, பாராட்டு தெரிவித்த அவர், உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு இது உதவும் என்றார்.

தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து பேசிய மத்திய அமைச்சர், கல்வியின் மூலம் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அது விரும்புகிறது என்றார். தேசிய கல்வி கொள்கை 2020-ன் பரிந்துரைகளை கலா உத்சவ் 2020 செயல்படுத்தி உள்ளது. மாணவர்கள் எந்த ஒரு கலை வடிவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும் அதற்கு தங்களது கற்பனையின் மூலம் உயிர் ஊட்டுகிறார்கள். இந்த நடைமுறைக்கான வாய்ப்பை கலா உத்சவ் வழங்குகிறது.

இதனால் மாணவர்களின் பல்வேறு திறமைகள் மேம்படுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது. டிஜிட்டல் தளத்தின் மூலம் 2021 ஜனவரி 10 அன்று கலா உத்சவ் 2020 ஆன்லைனில் தொடங்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்களிலிருந்து 35 குழுக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், 576 மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692938

***



(Release ID: 1692950) Visitor Counter : 210