எரிசக்தி அமைச்சகம்

இந்தியா-சர்வதேச எரிசக்தி முகமை: கேந்திர ரீதியான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 27 JAN 2021 4:56PM by PIB Chennai

கேந்திர ரீதியான கூட்டணி வடிவமைப்பிற்காக சர்வதேச எரிசக்தி முகமையுடன் ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா இன்று (ஜனவரி 27,2021) கையெழுத்திட்டுள்ளது. பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவும், நிலையான, ஸ்திரத்தன்மையான, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரிவான அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், சர்வதேச எரிசக்தி முகமையின் முழுநேர உறுப்பினராக இந்தியா செயல்படவும் இந்தக் கூட்டணி ஒரு படிக்கல்லாகத் திகழும்.

மத்திய எரிசக்தி செயலாளர் திரு சஞ்சீவ் நந்தன் சகாய், சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஃபடிஹ் பிரோல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எரிசக்தி பாதுகாப்பு, தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி, எரிசக்தி செயல்திறன், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட பெட்ரோலியம் சேமிப்பு திறன், விரிவுபடுத்தப்பட்ட எரிவாயு அடிப்படையிலான இந்திய பொருளாதாரம் போன்ற துறைகளை செம்மைப்படுத்த இந்த கூட்டணி ஏதுவாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692674

-----(Release ID: 1692734) Visitor Counter : 49