பிரதமர் அலுவலகம்

பருவநிலை தகவமைப்பு உச்சிமாநாடு 2021-ல் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 25 JAN 2021 8:50PM by PIB Chennai

மேன்மை தங்கிய தலைவர்களே,

பருவநிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை இந்தியா வரவேற்கிறது. இந்தக் காரணத்திற்காக பிரதமர் மார்க் ருட்டேவின் தலைமையைப் போற்றுகிறது.

முன்பு எப்போதும் இருந்ததை விட, பருவநிலை தகவமைப்பு இப்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

நாங்கள் எங்களுக்குள்ளேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.

பாரீஸ் ஒப்பந்த இலக்குடன் நின்று விடாமல் அதனையும் கடந்து செல்வோம்;

சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்து நிறுத்துவதுடன் நின்று விடாமல், அதை தலைகீழாக மாற்றுவோம்;  

புதிய திறன்களை உருவாக்குவதுடன் நில்லாமல், அவற்றை உலக நன்மைக்கான ஊக்குவிப்பாக மாற்றுவோம்.

எங்களது நடவடிக்கைகள் எங்கள் அர்ப்பணிப்பை காட்டுகின்றன

வரும்  2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 450 ஜிகாவாட் ஆக உயர்த்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.

எல்..டி. விளக்குகள் பயன்பாட்டை  நாங்கள்  ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் ஆண்டுக்கு 38 மில்லியன் டன் என்ற கட்டுப்பாட்டுக்குள் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வை கொண்டு வந்துள்ளோம்.

2030-ம் ஆண்டுக்குள், 26 மில்லியன் தரிசு நிலத்தை மீண்டும் வேளாண் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் போகிறோம்.

80 மில்லியன் கிராமப்புற வீடுகளுக்கு நாங்கள் தூய்மையான சமையல் எரிப்பொருளை வழங்கி வருகிறோம்.

64 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கியுள்ளோம்.

எங்களது முயற்சிகள் இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு கூட்டணி, உலக பருவநிலை கூட்டாண்மையின் ஆற்றலைக் காட்டுகிறது.

உள்கட்டமைப்பு நெகிழ்திறனை உலக அளவில் உயர்த்த, தகவமைப்பு குறித்த உலக ஆணையம், சிடிஆர்ஐ-யுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள மூன்றாவது சர்வதேச பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டுக்கு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

மேன்மை தங்கிய தலைவர்களே,

இந்தியாவின் நாகரிகமான மாண்புகள், இயற்கையுடன் இணைந்து நல்லிணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை எங்களுக்கு போதிக்கிறது.

எங்களது தொன்மையான யஜூர் வேதம், பூமிக்கோளுடனான நமது உறவு, அன்னைக்கும், அவளது குழந்தைக்கும் இடையிலானதைப்  போன்றது என எங்களுக்கு கற்பிக்கிறது

அன்னை பூமியை நாம் கவனித்து பராமரித்தால், அது நம்மை தொடர்ந்து வளர்த்து வரும்.

பருவநிலை மாற்றத்தை தகவமைக்க, நமது வாழ்க்கை முறையையும் நாம் இதற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வு நாம் முன்னேறிச் செல்ல வழிகாட்ட வேண்டும்.

உங்களுக்கு நன்றி!

**********************


(Release ID: 1692491) Visitor Counter : 257