குடியரசுத் தலைவர் செயலகம்
11வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
25 JAN 2021 12:32PM by PIB Chennai
இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய 11வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 2020-21ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். ‘ஹலோ வாக்காளர்கள்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் வானொலி சேவையையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்நிழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பேசியதாவது:
தேசிய வாக்காளர் தினத்தில், மதிப்பு மிக்க ஓட்டுரிமையை நாம் மதிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஓட்டுரிமை சாதாரண உரிமை அல்ல. இதற்காக உலகம் முழுவதும் மக்கள் போராடுகின்றனர். சுதந்திரம் பெற்றதிலிருந்து, நமது அரசியலமைப்புச் சட்டம், அனைத்து குடிமக்களுக்கும் மதம், இனம், ஜாதி பாகுபாடின்றி சம ஓட்டுரிமையை அளித்துள்ளது. இதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு நாம் கடமைபட்டுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர், ஓட்டுரிமையை மிக உயர்ந்ததாகக் கருதினார். அதனால் ஓட்டுரிமை பெற்றவர்கள், குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும், அதுபோல் அடுத்தவர்களும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692101
(Release ID: 1692213)
Visitor Counter : 231