மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஜேஇஇ (மெயின்) 2021-22: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு

Posted On: 19 JAN 2021 2:12PM by PIB Chennai

ஜேஇஇ (மெயின்) தேர்வின் அடிப்படையில், 2021- 22 கல்வி  ஆண்டில், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், திட்டம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தகுதியைப் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளர்த்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், மேற்குவங்காளத்தின் ஷிப்பூரிலுள்ள  இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் (இந்திய தொழில்நுட்ப கழகங்களைத் தவிர்த்து) இளங்கலைப்படிப்புக்கான சேர்க்கையானது, தேசிய தேர்வு முகமை நடத்தும் இணை நுழைவுத்தேர்வான ஜேஇஇ (மெயின்)-இன்  தரவரிசை/ தகுதியின் அடிப்படையில் நடைபெறும்.

ஜேஇஇ தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறிப்பிட்ட பள்ளி வாரியங்கள் நடத்தும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 20 சதவீதங்களுக்குள் மதிப்பெண் பெற வேண்டும்பட்டியலின/ பட்டியல் பழங்குடி மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் 65% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வின் தேதியை அறிவித்தபோது 2021-22 கல்வி ஆண்டில் தகுதி  பெறுவதற்கு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி  தளர்த்தப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689959

---



(Release ID: 1690019) Visitor Counter : 174