பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 18 JAN 2021 10:12PM by PIB Chennai

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மறைந்த திரு கேசுபாய் பட்டியலுக்கு உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

வருங்காலத்தில் அறக்கட்டளையை வழிநடத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடியை அதன் தலைவராக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்தப் பொறுப்புக்கு சம்மதம் தெரிவித்த பிரதமர், சோம்நாத் குழுவின் நடவடிக்கைகளையும் பாராட்டினார். அனைவரும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக, அறக்கட்டளையால் உள்கட்டமைப்புதங்கும் வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தவும், நமது தலைசிறந்த பாரம்பரியத்துடன் யாத்ரீகர்களின் இணைப்பை வலுப்படுத்தவும் முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள், வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் அப்போது நடைபெற்றது.

மதிப்பிற்குரிய ஜாம்சாஹேப் திக்விஜய்சிங் அவர்கள், திரு கனையாலால் முன்ஷி, முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய், திரு ஜெய் கிருஷ்ண ஹரி வல்லப், திரு தினேஷ்பாய் ஷா, திரு பிரசன்வதன் மேத்தா, திரு கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் தலைவர்களாக பொறுப்பு வகித்தனர்.

                                                                                              ------

 


(रिलीज़ आईडी: 1689940) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam