மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

நாட்டில் பறவை காய்ச்சல் தற்போதைய நிலவரம்

प्रविष्टि तिथि: 15 JAN 2021 6:17PM by PIB Chennai

2021 ஜனவரி 15-இன் படி, மத்தியப் பிரதேசத்தின் புர்ஹன்பூர், ராஜ்கர், திண்டோரி, சிந்த்வாரா, மண்ட்லா, ஹர்தா, தர், சாகர் மற்றும் சாத்னா மாவட்டங்கள் (காகங்கள் மற்றும் புறாக்களில்), உத்தரகாண்டின் டேராடூன் மவட்டம் (காகங்கள் மற்றும் காத்தாடை பறவைகளில்), தில்லியின் ரோகிணியில் (காகங்களில்) மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் (வாத்து மற்றும் கருப்பு நாரைகளில்) பறவை காய்ச்சல் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மேலும், மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள ஆனந்த்/பாகிரத் கலோசியாவிலும், சத்திஸ்கரின் பலோட் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது வரை, நாட்டின் 11 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநில/யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்பு துறைகளோடு நடைபெற்ற காணொலி கூட்டத்தை தொடர்ந்து மாநில/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், பறவை காய்ச்சல் நமது நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை என்றும், 2006-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தாக்கும் இந்நோயை நாடு சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நன்றாக சமைக்கப்பட்ட பண்ணை இறைச்சி உணவுகளால் நோய் பரவாது என்று கூறியுள்ள அவர், இது வரை பறவை காய்ச்சல் இல்லாத மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் பண்ணை பொருட்களின் விற்பனை மீது தடையேதும் விதிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688838

------


(रिलीज़ आईडी: 1688947) आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Telugu