பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ-நிர்வாக செயல்பாட்டுக்காக பழங்குடியினர் விவாகர அமைச்சகத்துக்கு ‘ஸ்காட்ச் சேலஞ்சர் விருது’: காணொலி காட்சி மூலம் பெறுகிறார் மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா

Posted On: 15 JAN 2021 3:49PM by PIB Chennai

-நிர்வாக செயல்பாட்டுக்காக பழங்குடியினர் விவாகர அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டஸ்காச் சேலஞ்சர் விருதை’’ அத்துறையின் மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா காணொலி காட்சி மூலம் நாளை பெறுகிறார்.

பழங்குடியினர் விவாகரத்துறை அமைச்சகம் மாற்றங்களுக்கான பல நடவடிக்கைகளை சமீபத்தில் மேற்கொண்டதுகாகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், அலுவலகத்தின் அனைத்து பணிகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. கண்காணிப்பு நடவடிக்கைகள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மாநிலங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டன. நிகழ் நேர தரவுகளை அவ்வப்போது புதுப்பிப்பதற்கான  வசதிகள்  செய்யப்பட்டனபழங்குடியினர் தொடர்பான தகவல்கள், செயல்திறன் டேஷ்போர்டு, நிதி ஆயோக், நேரடி பண பரிமாற்ற திட்டம் போன்றவை எல்லாம் பொது தளத்தில் வெளிப்படையாக உள்ளன.

இது குறித்து திரு அர்ஜூன் முண்டா கூறுகையில், ‘‘ கொள்கை வகுத்தல் மற்றும் நடவடிக்கை தொடர்பான எங்கள் அணுகுமுறையில் வியக்கத்தக்க  மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை உருவாக்கத்தை  நாங்கள் விரும்புகிறோம். இது யதார்த்தமானதாக இருக்கும் மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளை தீர்க்கும்மேலும், மாற்றங்களுக்காக, டிஜிட்டல் வழியை நாங்கள் பின்பற்றுகிறோம். இது வெளிப்படைத்தன்மையையும், விநியோக வேகத்தையும்  உறுதி செய்கிறது’’ என்றார்.

பழங்குடியினர் அமைச்சகத்தின் கல்வி உதவித் தொகை நடவடிக்கைகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் விவரங்கள், இணையதளத்தில் உள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைய சேவைகள் மூலம் தகவல்களை அனுப்புகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688800

-----


(Release ID: 1688841) Visitor Counter : 163