தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: மிகப்பெரிய அளவில் சிறப்பு காட்சிகள்

Posted On: 14 JAN 2021 3:19PM by PIB Chennai

நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் திரையிடப்படும் என்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா அறிவித்துள்ளது. சிறப்பு காட்சிகளும், உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களும் விழாவில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்காகத் திரையிடப்படும்.

சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை பெற்ற மேட்ஸ் மிக்கல்சென் நடித்த 'அனதர் ரவுண்ட்' திரைப்படத்தின், இந்திய சிறப்பு காட்சியோடு விழா தொடங்கும். தாமஸ் வின்டர்பெர்கால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைப்பதற்காக டென்மார்க்கால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.

சந்திப் குமாரின் 'மெஹருன்னிசா' சர்வதேச சிறப்பு காட்சி, விழாவின் இடையில் திரையிடப்படும். ஃபாருக் ஜஃபர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவைப் பற்றி பேசுகிறது.

கியோஷி குரோசவாவால் இயக்கப்பட்ட 'வைஃப் ஆஃப் ஸ்பை' இவ்விழாவின் நிறைவுத் திரைப்படமாக இருக்கும். சர்வதேசப் போட்டியில் மிகச் சிறந்த திரைப்படங்கள் பங்கு பெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688522

-----



(Release ID: 1688576) Visitor Counter : 151