விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்: வெற்றிகரமான 5 வருடங்கள்
Posted On:
12 JAN 2021 3:26PM by PIB Chennai
ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 2016 ஜனவரி 13 அன்று, இந்திய விவசாயிகளின் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவொன்றை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது.
2019 கரீப் பருவத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறண்ட சூழல் நிலவிய போது ரூ 500 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளிட்டவை இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் ஆகும். ஒரு வருடத்தில் 5.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இது வரை, இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலம் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே விரைவாகச் செலுத்தப்படுகிறது.
கொவிட் பொதுமுடக்க காலத்தில் கூட ரூ 8,741.30 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687913
***
(Release ID: 1687913)
(Release ID: 1687955)
Visitor Counter : 288