மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

பறவை காய்ச்சல்: தற்போதைய நிலவரமும், முக்கிய தகவல்களும்

Posted On: 06 JAN 2021 9:57AM by PIB Chennai

தற்போதைய  நிலவரம்

  •  நம் நாட்டில், தற்போது பறவைக் காய்ச்சல் கீழ்க் கண்ட மாநிலங்களில் 12 இடங்களில் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது :  
  • ராஜஸ்தானில் (காகம்)  - பரான், கோட்டா, ஜலாவர்
  • மத்தியப் பிரதேசம் (காகம்) - மண்ட்சார், இந்தூர், மால்வா
  • இமாச்சலப் பிரதேசம் (வெளிநாட்டுப் பறவைகள்) - கங்கரா
  • கேரளா (வாத்து) - கோட்டயம், ஆழப்பழா (4 இடங்கள்)
  • இதையடுத்து  பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க ராஜஸ்தானுக்கும், மத்தியப் பிரதேசத்துக்கும் இம்மாதம் 1ம் தேதி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டனபறவைக் காய்ச்சலுக்கான தேசிய செயல் திட்டப்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இமாச்சலப் பிரதேசத்துக்கு இம்மாதம் 5ம் தேதி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
  • கேரளாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இம்மாதம் 5ம் தேதி தொடங்கி விட்டன. நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் பறவைகளை கொன்று புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன
  • பறவைக் காய்ச்சல் நிலவரத்தைக் கண்காணிக்க  மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை தில்லியில் கட்டுப்பாடு அறையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • வழக்கத்துக்கு மாறாக பறவைகள் இறக்கின்றனவா என்பதை கண்காணிக்கும்படி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இல்லாத மற்ற மாநிலங்கள், தீவிர கண்காணிப்பையும், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் – முக்கிய தகவல்கள்

  • பறவை காய்ச்சலுக்கு காரணமானஏவியன் இன்ஃப்ளூயன்ஸாஉலகளவில் பல நூற்றாண்டுகளாக பரவி வருகின்றதுகடந்த நூற்றாண்டில் 4 மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
  • இந்தியாவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சல், கடந்த 2006ம் ஆண்டு ஏற்பட்டதுஇந்த வைரஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், இந்தியாவில் மனிதர்களுக்கு இன்னும் பாதிப்பு ஏற்படவில்லை
  • நோய் பாதிக்கப்பட்ட பறவை இறைச்சியைச் சாப்பிடுவதால், மனிதர்களுக்கு ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லைஆனாலும், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அனைத்து விதமான பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • குளிர் காலங்களில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளால், பறவைக் காய்ச்சல் இந்தியாவில் பரவுகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளான  பறவைகளை, மனிதர்கள் கையாள்வதால், இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
  • பறவைக் காய்ச்சல் அபாயத்தை முன்னிட்டு, மத்திய அரசின் கால்நடை  பராமரிப்புத்துறை கடந்த 2005ம் ஆண்டே செயல் திட்டத்தை உருவாக்கியது. அவை 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை கால்நடை பராமரிப்புத்துறை இணையதளத்திலும் உள்ளனhttps://dahd.nic.in/sites/default/filess/Action%20Plan%20-%20as%20on23.3.15.docx-final.pdf10.pdf
  • கடந்த 2020ம் ஆண்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு முடிந்தபின், கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி, இந்தியாவில் பறவைக் காய்ச்சல் இல்லை என அறிவிக்கப்பட்டது.
  • குளிர் காலத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்படும் என்ற கடந்த கால அனுபவத்தை வைத்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
  • போபாலில் உள்ள விலங்கு நோய் பாதுகாப்பு மையத்திலிருந்து தேவையான தொழில்நுட்ப உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கொல்லப்படும் நோய் பாதித்த பறவைகளுக்கு இழப்பீடும் வழங்கப்படுகின்றது.
  • கடைசியாக, கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி, பறவைக் காய்ச்சலை எதிர்கொள்வதற்கான தயார்நிலை ஆலோசனைகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686434

****

 (Release ID: 1686434)



(Release ID: 1686498) Visitor Counter : 619