ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளம் : திரு பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்

Posted On: 05 JAN 2021 2:28PM by PIB Chennai

நாட்டின் சரக்குப் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கடந்தாண்டு பொது முடக்கத்தின் போது பெரும்பாலான சேவைகளுக்கு தடையேற்பட்ட நிலையில், சரக்குகளைக் கொண்டு செல்வதில் தொய்வில்லாத சேவையை ரயில்வே ஆற்றியது.

வாடிக்கையாளர் சேவைகளை புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்லும் விதமாக, இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தை, ரயில்வே அமைச்சர் திரு பியுஷ் கோயல் இன்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் கண்ணுக்குப் புலப்படாத நூலிழை இந்திய ரயில்வே என்று புகழாரம் சூட்டினார். கொரோனா ஊரடங்கின் போது, அத்தியாவசியப் பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் சவலான பணியை ரயில்வே திறம்பட செய்ததாக அவர் கூறினார்.

மேலும் பேசிய திரு கோயல், இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளம், சரக்கு வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் என்றும், ரயில்வேயுடன் எளிதாக வர்த்தகம் செய்வதை உறுதி செய்யும் என்றும் கூறினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ரயில்வேத் துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத மேம்பாடு கடந்த ஆறு வருடங்களில் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். எதிர்காலத்தை நோக்கி ரயில்வே தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தின் இணைப்பு : https://www.fois.indianrail.gov.in/RailSAHAY

இதனை இந்திய ரயில்வே இணைய தளம் https://indianrailways.gov.in/# வாயிலாகவும் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686228

************



(Release ID: 1686264) Visitor Counter : 213