மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆண்டு இறுதி கண்ணோட்டம்: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம்

Posted On: 02 JAN 2021 3:45PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் போது வழங்கிய ஆதரவு உட்பட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை 2020-ஆம் ஆண்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் எடுத்தது. அவற்றுள் முக்கியமானவற்றுள் சில வருமாறு:

* ஆரோக்கிய சேது செயலி 17 கோடி தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டது; கொவிட்-19 பரவல் சாத்தியமுள்ள பகுதிகளை அதிக அளவில் முன்கூட்டியே கணித்தது

* 5.19 கோடி பேர் டிஜி லாக்கரில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 722 அமைப்புகளில் இருந்து 426 கோடிக்கும் அதிகமான கோப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் டிஜிட்டல் திறன்வளர்த்தல் முன்னெடுப்பை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் மற்றும் நாஸ்காம் தொடங்கின

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை இது சென்றடையும்.

* -மருத்துவமனைகள் 418 நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன, சுமார் 17.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

* 4.31 கோடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்களை இணையம் மூலம் நவம்பர் 2020 வரை ஜீவன் பிரமாண் வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685608

-----


(Release ID: 1685666) Visitor Counter : 181