குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக ஜனவரி 5-முதல் மீண்டும் திறப்பு

Posted On: 01 JAN 2021 4:37PM by PIB Chennai

2020 மார்ச் 13-இல் இருந்து கோவிட்-19 காரணமாக மூடப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம், மக்கள் பார்வையிடுவதற்காக 2021 ஜனவரி 5-இல் இருந்து மீண்டும் திறக்கப்படுகிறது. திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர அனைத்து நாள்களிலும் இது திறந்திருக்கும்.

https://presidentofindia.nic.in அல்லது https://rashtrapatisachivalaya.gov.in/ அல்லது https://rbmuseum.gov.in/ ஆகிய தளங்களில் பார்வையாளர்கள் தங்களது பார்வை நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். முன்பிருந்ததைப் போலவே ஒருவருக்கு ரூ.50/- பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அருங்காட்சியக வளாகத்திலேயே பதிவு செய்து கொள்ளும், முன்பிருந்த வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை, காலை 11.30 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை என்னும் நான்கு பார்வை நேரங்களில், அதிகபட்சம் தலா 25 நபர்கள் அனுமதிக்கப்படுவர். தனி நபர் இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கவும் வேண்டும்.

கோவிட்-19 பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கக்கூடிய நபர்கள் பார்வையிட வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலை, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகவும் அழகான, விலைமதிப்பில்லாத கலைப் பொருள்களைக் கொண்டு கதை சொல்லும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களை https://rbmuseum.gov.in/ என்னும் இணையதளத்தில் காணலாம்.

************(Release ID: 1685396) Visitor Counter : 159