சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
179 நாட்களுக்குப்பின் கோவிட் சிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2.54 லட்சமாக குறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2021 10:55AM by PIB Chennai
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று இந்த எண்ணிக்கை 2.54 லட்சமாக (2,54,254) குறைந்துள்ளது. இது கடந்த 179 நாட்களில் மிகக் குறைவு. இதற்கு முன் கடந்த 2020 ஜூலை 6ம் தேதி கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,53,287-ஆக இருந்தது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் பங்கு, மொத்த பாதிப்பில் 2.47 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 20,035 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 23,181 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த 35 நாட்களாக அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 (98,83,461) லட்சத்தை நெருங்கிறது. குணமடைந்தோர் பங்கு இன்று 96.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 256 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685281
************
(வெளியீட்டு அடையாள எண்: 1685346)
வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam