பிரதமர் அலுவலகம்

34-வது பிரகதி உரையாடலுக்குப் பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 30 DEC 2020 7:31PM by PIB Chennai

முப்பத்து நான்காவது பிரகதி உரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடையவையாகும்.

ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவற்றைக் குறித்து இன்றைய உரையாடலின் போது ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் தொடர்புடைய குறைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

குறைகளை விரைவாகவும், விரிவாகவும் தீர்க்குமாறு அனைத்து அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆய்வு செய்யப்பட்ட திட்டங்களைப் பொருத்தவரை, நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்க்குமாறும், இலக்கு தேதிக்குள் திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் தலைமைச் செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 100 சதவீத ஆட்சேர்ப்பை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஜல்ஜீவன் இயக்கத்தின் இலக்குகளை விரைந்து அடைவதற்கான திட்டத்தை வகுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

முந்தைய 38 பிரகதி உரையாடல்களில், 280 திட்டங்கள், 50 நிகழ்ச்சிகள்/திட்டங்கள் மற்றும் 18 துறைகளின் குறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

**********************(Release ID: 1684881) Visitor Counter : 33