பிரதமர் அலுவலகம்
போர்ட் பிளேயரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75-வது ஆண்டை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 DEC 2020 3:20PM by PIB Chennai
போர்ட் பிளேயரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில்,
“டிசம்பர் 30, 1943... போர்ட் பிளேயரில் வீரமிக்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய இந்நாள், ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு தினத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு போர்ட் பிளேயர் கென்று மூவர்ணக் கொடியை ஏற்றும் கௌரவம் எனக்குக் கிடைத்தது. சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்
------
(வெளியீட்டு அடையாள எண்: 1684746)
வருகையாளர் எண்ணிக்கை : 266
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam