மத்திய அமைச்சரவை

விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் இருதரப்பு ஒத்துழைப்பு: இந்தியா பூட்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 30 DEC 2020 3:42PM by PIB Chennai

விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் இருதரப்பு ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, பூட்டான் இடையே பெங்களூரில் கடந்த நவம்பர் 19ம் தேதி மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

பூமியின் தொலை உணர்வு, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் ஆராய்ச்சி, விண்கல பயன்பாடு, விண்வெளி அமைப்புகள், தரைகட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றில் இந்தியாவும், பூட்டானும் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இது இரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684624

------

 


(रिलीज़ आईडी: 1684727) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam