சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் 20 பேர் புதிய மாற்று வடிவ சார்ஸ்-கோவிட் – 2 வைரஸ் தொற்றால் பாதிப்பு
प्रविष्टि तिथि:
30 DEC 2020 11:08AM by PIB Chennai
இங்கிலாந்தில் பரவிவரும் ‘சார்ஸ்-கோவிட் – 2’ என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மொத்தம் இருபது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட 6 பேரும் இதில் அடங்குவர். இந்திய அரசு அறிவித்துள்ளபடி 10 ஆய்வகங்களை உள்ளடக்கிய இந்திய சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட 107 மாதிரிகளில் 20 மாதிரிகளில் (தில்லி என்சிடிசி-8, கல்யாணி (கொல்கத்தா அருகில்) என்ஐபிஜி - 1, புனே என்ஐவி- 1, பெங்களூரு நிம்ஹன்ஸ்- 7, ஹைதராபாத் சிசிஎம்பி- 2, தில்லி ஐஜிஐபி-1) உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து 33 நாட்களாக நாளொன்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கையைவிட அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20,549 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 26,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 98,34,141 பேர் (95.99%) குணமடைந்துள்ளனர். இது உலக அளவில் மிகவும் அதிகமாகும்.
கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது 2,62,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 2.56 சதவீதமாகும்.சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் பத்து லட்சம் மக்கள் தொகையில் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு (7,423). ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 78.44 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5572 பேரும், கேரளாவில் 5029 பேரும், சட்டீஸ்கரில் 1607 பேரும் குணமடைந்துள்ளனர்.
79.24 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 5887 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3018 பேரும், மேற்கு வங்காளத்தில் 1244 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 286 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 79.37 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 68 பேரும், மேற்கு வங்காளத்தில் 30 பேரும், தில்லியில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பத்து லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் உலக அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது (107).
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684544
-----
(रिलीज़ आईडी: 1684689)
आगंतुक पटल : 304
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam