விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கான நிதிநிலை கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது: திரு ஹர்தீப் சிங் புரி

Posted On: 26 DEC 2020 3:15PM by PIB Chennai

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த பட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அதிகமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அமல்படுத்தி உள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2014 முதல் 2019-ஆம் வருடம் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்காக செலவிடப்பட்ட தொகை 85 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2013-14-ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது 2020-21-ஆம் ஆண்டில் முக்கியமான அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் கடந்த வருடத்தை விட 25 சதவீதம் அதிகம் என்றும் இந்த வருடம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 20 சதவீதம் அதிகம் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683793

                                                                    ----


(Release ID: 1683867) Visitor Counter : 197