சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு திரு. நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்

Posted On: 25 DEC 2020 7:31PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களைக் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.

அசாம் முதல்வர் திரு சர்பானந்த் சோனோவால் இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் பேசிய திரு.நிதின் கட்கரி, தமது இதயத்தில் அசாமுக்கு சிறப்பான இடம் எப்போதுமே உண்டு என்று கூறினார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டத் திட்டங்களின் மூலம் 439 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூ.2,366 கோடி ஆகும். அசாமின் வளர்ச்சிக்கு இந்தச் சாலைகள் வழிவகுக்கும்.

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவச் சிலையையும் திரு நிதின் கட்கரி திறந்து வைத்தார். மறைந்த திரு வாஜ்பாயின் பிறந்த தினம் இன்று ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683685

----- 


(Release ID: 1683704)