சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.83 லட்சம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2020 11:03AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, தற்போது 2,83,849 ஆக உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் இது 2.80 சதவீதமாகும்.

ஒரு நாளில் ஏற்படும் புதிய பதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து தொடர்ந்து 27 நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,712 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 29,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து 12 நாட்களாக ஒரு நாளின் பாதிப்பு 30000-கும் கீழ் பதிவாகியுள்ளது.

நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (96,93,173). இதன் மூலம் குணமடைந்தோரின் வீதம் 95.75 சதவீதமாக உள்ளதுகுணமடைந்தவர்களில் 79.56 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7,620 பேரும், கேரளாவில் 4,808 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,153 பேரும் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய  பாதிப்பில் 76.48 சதவீதம், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 6,169 பேரும், மகாராஷ்டிராவில் 3,913 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,628 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 13-ஆவது நாளாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 79.81 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 93 பேரும், மேற்கு வங்காளத்தில் 34 பேரும், கேரளாவில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683241

                                                                  *****************


(வெளியீட்டு அடையாள எண்: 1683468) வருகையாளர் எண்ணிக்கை : 171