மத்திய அமைச்சரவை
டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
23 DEC 2020 4:46PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிடிஎச் லைசென்ஸ் 20 வருட காலத்துக்கு வழங்கப்படும். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளலாம்.
காலாண்டுக்கு ஒருமுறை லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் .
டிடிஎச் உள்கட்டமைப்பு வசதிகள் டிடிஎச் நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படவும் டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தம் வழிவகை செய்கிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட டிடிஎச் சேவை வழிமுறைகளின் படி இந்த முடிவு அமலுக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682976
*******
(Release ID: 1683007)
Visitor Counter : 267
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam