உள்துறை அமைச்சகம்

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரும், விஸ்வ பாரதியும், சாந்திநிகேதனும் எப்போதும் ஈர்க்கும் சக்திகளாக உள்ளனர்: மத்திய அமைச்சர் அமித்ஷா

Posted On: 20 DEC 2020 7:31PM by PIB Chennai

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரும், விஸ்வ பாரதி மற்றும் சாந்திநிகேதன்  அமைப்புகளும் எப்போதும் ஈர்க்கும் சக்திகளாக உள்ளன என  மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மேற்கு வங்கம் சாந்தி நிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியதாவது:

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரும், விஸ்வ பாரதியும், சாந்திநிகேதனும்  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஈர்க்கும் மையங்களாக  எப்போதும் உள்ளனர். நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் புதிய கருத்துக்களாக இருக்கட்டும் அல்லது சுதந்திரப் போராட்டமாக இருக்கட்டும், நாட்டின் இதர பகுதிகளை விட வங்காளம் 50 ஆண்டுகளுக்கு முன்னோக்கி இருந்து வருகிறது. விஸ்வபாரதி 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இது நிறுவப்பட்ட போது, சில கருத்துக்கள் இருந்திருக்கும். ஆனால் தற்போது 100 ஆண்டுகள் நிறைவு செய்யும் போது, குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் யோசனைகளைப்  புதுப்பிப்பதற்கான முயற்சி இந்த நிறுவனத்திலிருந்து  இருக்க வேண்டும். நாட்டின் கல்விமுறைக்கு சாந்தி நிகேதன், விஸ்வ பாரதி ஆகியவை மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளன.

இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682249

-----


(Release ID: 1682279) Visitor Counter : 192