பிரதமர் அலுவலகம்

திரு. எம். ஜி. வைத்தியா மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2020 6:53PM by PIB Chennai

திரு. எம். ஜி. வைத்தியா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு. எம். ஜி. வைத்தியா, ஓர் தலைசிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். பல தசாப்தங்களாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவர்  சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பி.ஜே.பியை வலுப்படுத்தவும் அவர் கடுமையாக உழைத்தார். அவரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”  இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1682026) வருகையாளர் எண்ணிக்கை : 148