வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக வடகிழக்கு மாகாணங்கள் வளரும்: அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை

Posted On: 19 DEC 2020 5:39PM by PIB Chennai

கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத்தலமாகவும், வர்த்தக மையமாகவும் வளர்ச்சி அடையும் என்று வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான மத்திய இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

8-வது வடகிழக்குத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய அவர், மிகப்பெரும் இயற்கை மற்றும் மனித ஆற்றலின் ஆதரவுடன் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் வடகிழக்கு மாகாணங்கள் முன்னிலை வகிக்கும் என்றும், ஐரோப்பிய சுற்றுலாத்தலங்களுக்கு மாற்றாக இவை செயல்படும் என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணங்களில் அதிகம் விளையும் மூங்கில் போன்ற இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெளியுறவுச் செயலாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்களா சிறப்புரை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681995

**********************


(Release ID: 1682022) Visitor Counter : 171