தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அசுரன், தேன் உட்பட 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு

Posted On: 19 DEC 2020 1:24PM by PIB Chennai

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பெரிய திரையில் காட்டப்படும்.

183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு குழுவின் தலைவராக புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் திரு ஜான் மேத்யூ மட்தான்  இருந்தார். உறுப்பினர்களாக திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் நடன இயக்குனர் திருமதி கலாவும் ஒருவர்.

இந்தியன் பனோரமா பிரிவில்  இத்திரைப்படங்கள் திரையிடப்படும். இவற்றில் முதல் படமாக துஷார்  ஹிராநந்தினி இயக்கிய சாந்த் கீ ஆங்க் என்னும் இந்தி திரைப்படம் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681946

**********************



(Release ID: 1681993) Visitor Counter : 258