பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் ராணுவ வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
18 DEC 2020 3:02PM by PIB Chennai
நான்காவது ராணுவ இலக்கிய விழாவில் புதுதில்லியில் இருந்து காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று உரையாற்றினார்.
நாட்டின் ராணுவ வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ராணுவ இலக்கியத் திருவிழா போன்ற புதுமையான முயற்சிகளை வரவேற்றார்.
இத்தகைய நிகழ்வுகளின் மூலம் பொது மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நமது பாதுகாப்புப் படைகள் புரிந்த போர்கள் குறித்தும், வீரர்களின் அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டு நாட்டுப்பற்றுடன் திகழ்வார்கள் என்றார்.
ராணுவ வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், பாதுகாப்பு அமைச்சராக தாம் பதவி ஏற்றுக் கொண்டவுடன், நாட்டின் எல்லைப்புற வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியைத் துரிதப்படுத்த குழு ஒன்றை அமைத்ததாக கூறினார்.
எல்லைகளில் நடந்த போர்கள், வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றைக் குறித்து எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வரலாறாக வெளியிடுவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681715
*****
(Release ID: 1681715)
(रिलीज़ आईडी: 1681737)
आगंतुक पटल : 235