அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020

Posted On: 17 DEC 2020 11:14AM by PIB Chennai

வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் மெய்நிகர் சுற்றுலா, காணொலி வாயிலான முப்பரிமாணக் கண்காட்சிகள், விவாதங்கள், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட 41 நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகவும், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்)- புதுதில்லியின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுக் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் (என்ஐஎஸ்டிஏடிஎஸ்) இயக்குநர் டாக்டர். ரஞ்சனா அகர்வால் தெரிவித்துள்ளார். ஜே. சி. போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், விஞ்ஞான் பாரதி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா குறித்த முன்னோட்ட நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், புவி அறிவியல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து நடத்தும் இந்தத் திருவிழாவில், மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து அறிவியல் குறித்த பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இதர விவரங்களுக்கு  www.scienceindiafest.org என்னும் இணைய தளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை இங்கே ஆங்கிலத்தில் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681329

••••••••

(Release ID: 1681329)(Release ID: 1681406) Visitor Counter : 181