இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் 6 ஸ்குவாஷ் ஆடுகளங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டினார்
प्रविष्टि तिथि:
16 DEC 2020 6:14PM by PIB Chennai
மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உலகத்தரம் வாய்ந்த 6 ஸ்குவாஷ் ஆடுகளங்களுக்கான அடிக்கல்லை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு முன்னிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர் இன்று நாட்டினார்.
விளையாட்டு ஆர்வலரும் சிறந்த ஸ்குவாஷ் வீரருமான திரு ஜெய்சங்கர், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியதோடு, இந்த ஆடுகளங்கள் கட்டி முடிக்கப்பட்டு தயாரானவுடன், இங்கு வந்து விளையாடுவதற்கு தான் ஆர்வமாக உள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களும் சிறப்பான பயிற்சியாளர்களும் உள்ளனர். வீரர்கள் தகுந்த பயிற்சியாளர்களை சென்றடைவதில் தான் பிரச்சனை உள்ளது," என்றார்.
மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உலகத்தரம் வாய்ந்த 6 ஸ்குவாஷ் ஆடுகளங்கள் அமைக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் வரவிருக்கும் பல்வேறு வசதிகளுக்கு இவை முன்னோடியாக திகழும் என்றார்.
விளையாட்டை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்றும், ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமாக அது இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681151
**********************
(रिलीज़ आईडी: 1681262)
आगंतुक पटल : 145