பாதுகாப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்க அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 DEC 2020 1:43PM by PIB Chennai
                
                
                
                
                
                
                கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பாங்காக்கில் 2020 டிசம்பர் 10 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற 14-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 
மண்டல மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு என்னும் விவாதத்தில் இந்தியாவின் பார்வை குறித்து அவர் பேசினார். குறிப்பாக இந்தோ- பசிபிக் பகுதி பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் மதித்து வெளிப்படையான, உள்ளடக்கிய விதிகள் அடிப்படையிலான சூழலை, இந்தோ- பசிபிக் மண்டலத்துக்கு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
மண்டல மற்றும் உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் கவலை தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் இணைந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1679635
******
 
(Release ID: 1679635)
                
                
                
                
                
                (Release ID: 1679663)
                Visitor Counter : 354