பிரதமர் அலுவலகம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் மேதகு திரு சவ்கத் மிர்சியோயேவ் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி இடையே காணொலிக் காட்சி மூலம் இருதரப்பு சந்திப்பு

Posted On: 09 DEC 2020 6:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் மேதகு திரு சவ்கத் மிர்சியோயேவ் இடையேயான  இருதரப்பு ஆலோசனை கூட்டம்  2020 டிசம்பர் 11ம் தேதி காணொலிக் காட்சி மூலம்  நடக்கிறது.

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடு ஒன்றுடன்  நடைபெறும் முதல் மெய்நிகர் ஆலோசனைக் கூட்டம் இதுகொவிட்-19க்கு பிந்தைய உலகில், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கவுள்ளனர். இருதரப்பு நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொள்வர்

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையோன இருதரப்பு உறவு நன்றாக உள்ளதுகடந்த 2015ம், 2016ம் ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணம், 2018, 2019ம் ஆண்டுகளில் உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவின் இந்தியப் பயணம் ஆகியவை இருதரப்பு  கூட்டுறவில் புதிய ஆற்றலை ஏற்படுத்தியுள்ளன.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

*****


(Release ID: 1679649)