பாதுகாப்பு அமைச்சகம்

2 டிஆர்டிஓ ஆய்வு மையங்களிடையே குவாண்டம் தகவல் தொடர்பு பரிசோதனை வெற்றி

Posted On: 09 DEC 2020 3:55PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) இரண்டு ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட குவாண்டம் தகவல் தொடர்பு பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது

உலகம் முழுவதும் ராணுவ மற்றும் உத்தி நிறுவனங்களுக்கு இடையே பாதுகாப்பான தகவல் தொடர்பு முக்கியம். அதனால் முக்கிய தகவல்கள் குறியாக்க விசைகளாக, காற்றிலும், வயர்கள் மூலமும் அனுப்பப்படும்இந்தக் குறியீடுகளை பாதுகாப்பாகப் பகிர்வதற்கு குவாண்டம் அடிப்படையிலான தகவல் தொடர்பு வலுவான தீர்வை அளிக்கிறது.

இந்த குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆய்வை டிஆர்டிஓ  மேற்கொண்டது.

இதற்காக பெங்களூரில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் மையம் (சிஏஐஆர்), மும்பையில் உள்ள டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் குவாண்டம் தொழில்நுட்ப ஆய்வு மையம் (டிஓய்எஸ்எல்-க்யூடி) ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் டிஆர்டிஎல், ஆர்சிஐ  ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டது. இது முழு வெற்றியடைந்துள்ளது

தற்போது மிகவும் பாதுகாப்பான தகவல் தொடர்புக்கு, குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை (க்யூ.கே.டிடிஆர்டிஒ உருவாக்கியுள்ளது.

இந்த குவாண்டம் தகவல் தொடர்பு பரிசோதனை வெற்றி பெற்றதற்காக,  டிஆர்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679349

*****

(Release ID: 1679349)


(Release ID: 1679389) Visitor Counter : 290