பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் தொலைபேசியில் பேசினார்

Posted On: 07 DEC 2020 10:10PM by PIB Chennai

பிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.

பிரான்சில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்காக அதிபர் மேக்ரானிடம், பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்தார்தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்துக்கும் எதிரான போராட்டத்தில், பிரான்சுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்  என  பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் சூழலை மேம்படுத்துவது, கொவிட்டுக்குப் பிந்தைய பொருளாதார மீட்பு, இந்தோ-பசிபிக் மண்டலத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, கடல்சார் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சைபர் பாதுகாப்பு, பலதரப்புக் கொள்கையை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் உட்பட இதர இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சமீப காலங்களில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான யுக்தி கூட்டு நடவடிக்கை வலுவடைந்தள்ளது பற்றி இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். கொவிட்டுக்கு பின்பும், இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டனர்.

பொது சுகாதாரச் சூழல் இயல்பான பிறகு, அதிபர் மேக்ரான் இந்திய வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிரதமர் தெரிவித்தார்.

 

****



(Release ID: 1679034) Visitor Counter : 196