ஆயுஷ்

ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழு அமைக்க மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் முடிவு

Posted On: 06 DEC 2020 2:18PM by PIB Chennai

ஆயுஷ் தயாரிப்புகள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழு அமைக்க மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை முடிவு செய்துள்ளன.

 மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோர் ஆயுஷ் வர்த்தகம் மற்றும் தொழில் குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதுஆயுஷ் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ஒட்டுமொத்த ஆயுஷ் துறையும் இணைந்து செயல்பட இந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டம் கடந்த டிசம்பர் 4ம் தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் ஆயுஷ் துறையைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக தலைவர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்ஆயுஷ் துறையைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தை தொடங்கி வைத்த ஆயுஷ் செயலாளர், ஆயுஷ் அமைச்சகம் இதற்கு முந்தைய கூட்டத்தில் செய்த பரிந்துரைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார். கொவிட்-19 நிலவரத்தை தணிப்பதற்கும், ஆயுஷ் தொழில்துறை முன்னேற்றுவதற்கும், பரிந்துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கூறினார். ஆயுஷ் துறையில் உருவாகும் வாய்ப்புகள் குறித்தும், கவனம் செலுத்த வேண்டிய சில தடைகள் குறித்தும் அவர் பேசினார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஆயுஷ் தொழில் துறையினரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்

கொவிட்-19- முன்னிட்டு மக்களுக்கும் ஆயுஷ் அடிப்படையிலான தீர்வுகளை வழங்க ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று போன்ற சிக்கலான நேரங்களில், நோய் தடுப்புக்கும், சிகிச்சைக்கும் ஆயுஷ் அடிப்படையிலான தீர்வுகளுக்கு உலகளவில் வரவேற்பு இருந்ததை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் சுட்டிக் காட்டினார். இந்தியாவிலும், உலகளவிலும் ஆயுஷ் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் ஆயுஷ் துறை வர்த்தகத்தை விரைவாக மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், ஆயுஷ் துறை ஆற்றிய முன்னணி பங்கை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டினார். ஆயுஷ் தயாரிப்புகளை  இந்திய தர அடையாளத்துடன், மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழுவை அமைப்பதற்கு ஆயுஷ் அமைச்சகமும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமும் இணைந்து செயல்பட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழு, ஆயுஷ் அமைச்கத்திலேயே அமைக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678702

-----(Release ID: 1678713) Visitor Counter : 22