இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டிசம்பர் 12 முதல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை மல்யுத்த போட்டியில் ரவிக்குமார், தீபக் புனியா உள்ளிட்ட 24 பேர் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறார்கள்

Posted On: 03 DEC 2020 4:33PM by PIB Chennai

செர்பியாவில் உள்ள பெல்கிரேடில், 2020 டிசம்பர் 12 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் மூத்த வீரர்களுக்கான தனிநபர் உலகக் கோப்பை மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக 42 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து செல்கிறது.

இருபத்து நான்கு மல்யுத்த வீரர்கள், ஒன்பது பயிற்சியாளர்கள், மூன்று உதவியாளர்கள் மற்றும் மூன்று நடுவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும்  பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இவர்கள் இப்போட்டியில் பங்கேற்பதற்காக ரூபாய்

90 லட்சத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விமான பயணச் சீட்டுகள், தங்குமிடம் மற்றும் உணவு கட்டணங்கள், ஐக்கிய உலக மல்யுத்த உரிம கட்டணம், விசா கட்டணம் மற்றும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களின் இதர செலவுகளுக்காக மேற்கொண்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார், தீபக் புனியா, ராகுல் அவாரே, நவீன், கௌரவ் பலியான், சத்தியவிரத் காடியான், சுமித் உள்ளிட்ட வீரர்கள் உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678035



(Release ID: 1678101) Visitor Counter : 173