பாதுகாப்பு அமைச்சகம்

எதிர்கால போர்களில் நோய்க்கிருமிகள் ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்: ராணுவ துணை தளபதி

Posted On: 02 DEC 2020 6:26PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய சவால்கள் குறித்து வங்கதேச தேசிய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களுடன் இந்திய ராணுவப் படையின் துணை தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் எஸ் கே சைனி காணொலி மூலம் 2020 டிசம்பர் 2 அன்று உரையாற்றினார்.

எதிர்கால உலகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறித்தும், ராணுவத்தின் மீதான அதன் தாக்கம் குறித்தும், பாதுகாப்பு சவால்கள் பற்றியும், அவற்றை எதிர்கொள்வதற்கான அவரது சிந்தனைகள் பற்றியும் லெப்டினெண்ட் ஜெனரல் எஸ் கே சைனி பேசினார்.

அவசர சுகாதாரத் தேவைகளுக்காக அதிகளவிலான பணம் செலவிடப்பட்டுள்ளதால் ராணுவத் திறன் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

எதிர்கால போர்களைப் பற்றி பேசிய அவர், செலவேதும் இல்லாத, அதிக சக்தி வாய்ந்த நோய்க்கிருமியை உயர் தொழில்நுட்ப ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய போர்கள் வருங்காலத்தில் நடைபெறலாம் என்றார்.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677719

**********************



(Release ID: 1677803) Visitor Counter : 177