நிதி அமைச்சகம்

அர்த்தமுள்ள பொருளாதார ஒத்துழைப்பை இலங்கையுடன் தொடர இந்தியா தயாராக உள்ளது: திருமதி நிர்மலா சீதாராமன்

Posted On: 01 DEC 2020 5:25PM by PIB Chennai

இலங்கை பொருளாதார உச்சி மாநாட்டின் இருபதாவது பதிப்பில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் இன்று சிறப்புரை ஆற்றினார்.

அர்த்தமுள்ள பொருளாதார ஒத்துழைப்பை இலங்கையுடன் தொடர இந்தியா தயாராக உள்ளது என்று தன்னுடைய உரையில் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களை விவாதிப்பதற்கான இலங்கையின் முன்னணி அமைப்பான சிலோன் வர்த்தக சபை, இலங்கை பொருளாதார உச்சி மாநாட்டை வருடம் தோறும் நடத்துகிறது.

இலங்கை அதிபர் மேன்மைமிகு திரு கோத்தபாய ராஜபக்ச இவ்வருட உச்சிமாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

          வளர்ச்சி சார்ந்த ஒத்துழைப்பு உறவுகளில் இலங்கையின் வலிமைமிக்க பங்குதாரராக இந்தியா திகழ்வதாகவும், அர்த்தமுள்ள உறவை தொடர்ந்து பேணிக்காக்க இந்தியா தயாராக உள்ளதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677405

-----



(Release ID: 1677503) Visitor Counter : 203