கலாசாரத்துறை அமைச்சகம்

புத்த பாரம்பரியம் குறித்த காணொலி கண்காட்சி

Posted On: 30 NOV 2020 4:35PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும், 2020 ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடுஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் 19-வது அமர்வில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் புத்த பாரம்பரியம் குறித்த முதல் காணொலி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த சர்வதேச கண்காட்சியைத் தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுடன் இணைந்து நடத்துகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

https://nmvirtual.in/ என்ற இணையதளத்தில் இந்த கண்காட்சியை உலகெங்கும் இருந்து கண்டு ரசிக்கலாம்.

புத்த கலைப்பொருட்களைப் பார்வையாளர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து காணும் வசதியை இந்த கண்காட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் தேசிய அருங்காட்சியகம் ( புது தில்லி), இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா) ஆகியவற்றுடன் கசகஸ்தான், சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகங்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.‌

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677157

*******************


(Release ID: 1677230) Visitor Counter : 272