குடியரசுத் தலைவர் செயலகம்

குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 29 NOV 2020 5:04PM by PIB Chennai

குருநானக் தேவ் பிறந்தாள், கொண்டாப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ குருநானக் தேவ்-ன் பிறந்த நாளை முன்னிட்டுஇந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக சீக்கிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

குரு நானக் தேவ்-ன் வாழ்க்கை மற்றும் போதனைகள், எல்லா மனிதர்களுக்கும் உத்வேகமாக உள்ளன.  ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நகைச்சுவை மற்றும் சேவையின் பாதையை, அவர் மக்களுக்குக் காட்டினார். கடின உழைப்பு, நேர்மை மற்றும் சுய மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், வாழ்க்கை முறையை உணர பொருளாதார தத்துவத்தை அவர் வழங்கினார்.

கடவுள் ஒருவரேஎன்ற அடிப்படை மந்திரத்தை, தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு  குரு நானக் தேவ் வழங்கினார் மற்றும் ஜாதி, மதம் மற்றும் பாலினம் என பாகுபாடு பார்க்காமல் மனிதனர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.  கடவுளை நினைக்கவும், நேர்மையாக உழைக்கவும், பிறருக்கு உதவவும்என்ற அவரது  செய்தியில், அவரது அனைத்து போதனைகளின் சாரம்சமும் உள்ளது.

குருநானக் தேவ் பிறந்த புனித தினத்தில், அவரது போதனைகளை பின்பற்றும் விதத்தில் நாம் நடந்துகொள்வோம் என உறுதி ஏற்போம்’’  என கூறியுள்ளார்.

*******************


(Release ID: 1677009) Visitor Counter : 204