அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமைகள், தொழில்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சர்வதேச புதுமை மற்றும் தொழில்நுட்பக் கூட்டணி உந்துசக்தியாக செயல்படுகிறது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 28 NOV 2020 2:59PM by PIB Chennai

கல்வித் துறை மற்றும் அரசுடன் இணைந்து  புதுமைகள், தொழில்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் சர்வதேச புதுமை மற்றும் தொழில்நுட்பக் கூட்டணி (கீதா) உந்துசக்தியாக செயல்பட்டதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கீதா அமைப்பின் ஒன்பதாவது நிறுவன விழாவில் காணொலி வாயிலாக அவர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேல், கொரியா, கனடா, ஃபின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற உலகின்  மிக புதுமை நாடுகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, கீதா அமைப்பின் வாயிலாக இருதரப்புத் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதுஎன்று அவர் கூறினார்.

சவாலான இந்தத் தருணத்தை இந்தியா தற்சார்பு அடைவதற்கு சாதகமாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை ஏற்று தற்சார்பு இந்தியாவை உருவாக்க அறிவியல் சார்ந்த மன நிலையை ஏற்படுத்துவதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னின்று செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ ஆகியவற்றுக்கு இடையே பொது தனியார் பங்களிப்பில் இயங்கும் சர்வதேச புதுமை மற்றும் தொழில்நுட்ப கூட்டணி, தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளில் தனது ஒன்பதாவது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676706

----- 



(Release ID: 1676764) Visitor Counter : 252