பிரதமர் அலுவலகம்

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்பப் பூங்காவிற்கு பிரதமர் நேரில் சென்றார்

Posted On: 28 NOV 2020 12:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாட்டிலேயே மரபணு சார்ந்து ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசி குறித்து மேலும் தெரிந்துகொள்ளஅகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்பப் பூங்காவிற்கு நேரில் சென்றார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் செய்தியில், “ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தால் மரபணுவை மையமாகக்கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசியை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்பப் பூங்காவிற்கு நேரில் சென்றேன். இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவிற்கு எனது பாராட்டுக்கள். அவர்களின் இந்தப் பயணத்தில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறதுஎன்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

-----


(Release ID: 1676743) Visitor Counter : 151