ரெயில்வே அமைச்சகம்
டிஜிட்டல் மனிதவள மேலாண்மை முறையை தொடங்கியது இந்திய ரயில்வே
27 லட்சம் ஊழியர்கள், ஒய்வூதியதாரர்களுக்கு பயன்
प्रविष्टि तिथि:
26 NOV 2020 1:45PM by PIB Chennai
ஊழியர்களுக்காகவும், ஓய்வூதியர்களுக்காகவும், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆன்லைன் மனிதவள மேலாண்மை முறையை (எச்ஆர்எம்எஸ்) இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
ஊழியர்களின் செயல்பாடு மற்றும் திருப்தியை அதிகரிக்க ரயில்வே மேற்கொண்ட மிக முக்கியமான திட்டம் இது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பல தேவைகளை இனி ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும்.
பி.எப் முன்பணத்துக்கு விண்ணப்பித்தல், பிப் சேமிப்பு இருப்பு போன்ற விவரங்களையும் இந்த டிஜிட்டல் எச்ஆர்எம்எஸ் தளத்தில் ரயில்வே ஊழியர்கள் அறிந்து கொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களுக்கு விண்ணப்பிக்கவும், ஓய்வூதியம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் காகித பயன்பாடு குறையும்.
இது 27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த டிஜிட்டல் தளத்தில் இருக்கும்.
மேலும் இந்தியாவை டிஜிட்டல் சமூகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கையும் இத்திட்டம் நனவாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676010
(रिलीज़ आईडी: 1676046)
आगंतुक पटल : 296